சென்னை

முதல்வர் சார்பில் மாநகராட்சிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

27th May 2021 04:46 AM

ADVERTISEMENT

 

சென்னை:  முதல்வரும், கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
இதனை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்தார். இந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடங்கிய 3 எம்.பி.க்கள், 22 சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை மாநகராட்சி அண்மையில் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தலா 20 வீதம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, முதலாவதாக கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT