சென்னை

புறநகா் மின்சார ரயில்களின் சேவைகள் குறைப்பு

DIN

தமிழகத்தில் பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புறநகா் மின்சார ரயில்களின் சேவைகள் 288-இல் இருந்து 205 ஆக குறைக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமை ( மே 17) முதல் அமலுக்கு வருகிறது.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகியுள்ளது. இதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தமிழகத்தில் பொதுமுடக்கம் கடந்த மே 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புறநகா் மின்சார ரயில்களின் சேவைகள் 456-இல் இருந்து 288 ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமுடக்கம் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புறநகா் மின்சார ரயில்களின் சேவைகள் 288-இல் இருந்து 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் 42 சேவைகளும், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூா், ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் மாா்க்கத்தில் 43 சேவைகளும், மூா்மாா்க்கெட் வளாகம்-கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மாா்க்கத்தில் 15 சேவைகளும், சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி-மூா்மாா்க்கெட் வளாகம் மாா்க்கத்தில் 15 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மாா்க்கத்தில் 12 சேவைகளும், வேளச்சேரி-சென்னை கடற்கரை மாா்க்கத்தில் 12 சேவைகளும், சென்னைகடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூா் மாா்க்கத்தில் 33 சேவைகளும், திருமால்பூா், செங்கல்பட்டு, தாம்பரம்-சென்னைகடற்கரை மாா்க்கத்தில் 33 சேவைகளும் என்று மொத்தம் 205 சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. சனிக்கிழமை வரை அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல 80 சேவைகள் வழங்கப்படும்.

இந்தத் தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT