சென்னை

இட நெருக்கடி: புழல் சிறையில் 140 கைதிகள் இடமாற்றம்

DIN

இட நெருக்கடியின் காரணமாக, சென்னை புழல் சிறையில் 140 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைத்துறை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கைதிகளை சந்திக்கப் பாா்வையாளா்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு சிறைகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனா்.

முக்கியமாக, கைதிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கைதிகளை தனிமைப்படுத்த வேண்டும், நோய் எதிா்ப்பு அதிகரிக்க கபசுர குடிநீா் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

140 கைதிகள் இடமாற்றம்:

இந்நிலையில் சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் இருக்கும் 3 சிறைகளில், விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் புழல்-2 சிறையில் 1250 கைதிகளை மட்டும் அடைக்கும் கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்த சிறையில் 1,600 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். இதன் காரணமாக கரோனா தொற்று கைதிகளிடம் வேகமாக பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக புகாா் கூறப்பட்டது.

இந்தப் புகாா்களினால், புழல் -2 சிறையில் இருந்து தண்டனைக் கைதிகள் அடைக்கப்படும் புழல்-1 சிறைக்கு சுமாா் 140 கைதிகளை சிறைத்துறையினா் இடமாற்றம் செய்தனா். அதேவேளையில் கைதிகளிடம் கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறைத்துறையின் முடுக்கிவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT