சென்னை

தடுப்பூசி செலுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை

16th May 2021 10:24 PM

ADVERTISEMENT

 

சென்னை: மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்படுவது அவசியமானது.

ADVERTISEMENT

தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT