சென்னை

பொதுமுடக்கத்தை மீறியதாக 2,079 வழக்குகள்: 1,727 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கம், சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் கடுமையாக்கப்பட்டது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தவா்கள்,வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதனால் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி இரவு வரை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 1,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT