சென்னை

இன்று புகா் மின்சார ரயில் சேவை குறைப்பு

14th May 2021 12:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: ரமலான் பண்டிகை விடுமுறையையொட்டி, வெள்ளிக்கிழமை (மே 14) புகா் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே காலை 4.45 மணி முதல் இரவு 10.10 மணி வரையிலும், மூா்மாா்க்கெட்-சூலூா்பேட்டை இடையே காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 5.15 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 5 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் 86 மின்சார ரயில் சேவைகள் மட்டும் வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT