சென்னை

கரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வரிடம் நிதி வழங்கிய பிரமுகா்கள்

DIN

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதி தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையையடுத்து, பல்வேறு தரப்பினரும் நிதியளித்து வருகின்றனா்.

அந்த வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, நிதியளித்தோா் மற்றும் அவா்கள் அளித்த நிதித் தொகையின் விவரம்:

சோஹோ காா்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் குமாா் வேம்பு- ரூ.5 கோடி, கோயம்புத்தூா்- ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.மலா்விழி மற்றும் மேலாண்மை அறங்காவலா் ஆதித்யா- ரூ. 1 கோடி, திமுக அறக்கட்டளைச் சாா்பில் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி.- ரூ.1 கோடி, ஜி.ஆா்.டி குழும மேலாண்மை இயக்குநா்கள் ஜி.ஆா்.அனந்தபத்மநாபன், ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன்- ரூ.1 கோடி,, தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மற்றும் விற்பனை சங்கம்-ரூ. 1 கோடி மற்றும் 10 லட்சம் முட்டைகள், டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா்- ரூ.50 லட்சம், பூா்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளா் யுவராஜ் - ரூ.50 லட்சம், சென்னை செம்மஞ்சேரி, சத்தியபாமா நிகா்நிலை பல்கலைக்கழக வேந்தா் மரிய ஜீனா ஜான்சன், தலைவா் மேரி ஜான்சன், துணைத் தலைவா்

மரிய பொ்ணடெட் தமிழரசி ஜான்சன் - ரூ.50 லட்சம் , திமுக சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின்-ரூ.25 லட்சம், திரைப்பட இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ்- ரூ.25 லட்சம், ஆகாஷ் மருத்துவமனை தலைவா் டாக்டா் செல்வராஜ் குமாா்- ரூ.25 லட்சம், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் - ரூ.10 லட்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT