சென்னை

குழந்தைத் திருமணம் குறித்து புகார் செய்யலாம்: ஆட்சியர் அறிவிப்பு

DIN

சென்னை: தங்கள் சுற்றுவட்டார  பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடைபெற்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் சட்டப்படி குற்றமாகும்.  இத் திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவருக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடைபெற உள்ளது பற்றிய தகவல் கிடைத்தால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் , மாவட்ட சமூகநல அலுவலர், காவல் துறை, முதல் வகுப்பு நீதிபதி,  பெருநகர நீதிபதி, குழந்தைகள் நல குழுமம்,  குழந்தைகள் வழியம் (தொலைபேசி எண் : 1098 இட்ண்ப்க் கண்ய்ங்), ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழு  ஆகிய அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT