சென்னை

சட்டப் பல்கலை.யில் பிஹெச்.டி. சேர்க்கை: நுழைவுத்தேர்வு அறிவிப்பு

DIN

சென்னை:   தமிழக சட்ட பல்கலையில் பிஹெச்.டி. மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், 2021- - 22ம் கல்வி ஆண்டிற்கான பிஹெச்.டி. ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 110 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் சட்ட பல்கலை.யின், இணையதளத்தில், விண்ணப்ப படிவம்,  தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.750; மற்றவர்கள் ரூ.1,250 செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும். வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அடிப்படை கல்வி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு  ஜூன் 19-இல் இணையவழி நுழைவு தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளர் பாலாஜி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT