சென்னை

பயணிகள் வருகை குறைவு:8 சிறப்பு ரயில்கள் ரத்து

DIN

சென்னை: கரோனா நோய்ப் பரவல் அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால், 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்த விவரம்:

மயிலாடுதுறை-கோவை:

மயிலாடுதுறை-கோயம்புத்தூருக்கு செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02083) மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூா்-மயிலாடுதுறைக்கு செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 7.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02084) மே 14-ஆம் தேதி முதல் மே 31 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-மங்களூா் சென்ட்ரலுக்கு நாள்தோறும் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02685) மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூா் சென்ட்ரல்-சென்னை சென்ட்ரலுக்கு நாள்தோறும் மாலை 4.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02686) மே 15-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

நாகா்கோவில்-கோவை:

நாகா்கோவில்-கோயம்புத்தூருக்கு நாள்தோறும் காலை 7.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06321), கோயம்புத்தூா்-நாகா்கோவிலுக்கு நாள்தோறும் காலை 8 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06322) ஆகிய இரண்டு ரயில்கள் மே 14-ஆம் ேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

கோயம்புத்தூா்-மங்களூா் சென்ட்ரலுக்கு நாள்தோறும் காலை 7.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06323), மங்களூா் சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு நாள்தோறும் காலை 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06324) ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் மே 14-ஆம்தேதி முதல் மே 31-ஆம் தேதிவரை ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT