சென்னை

முழு பொதுமுடக்கம்: சென்னை காவல்துறை சாா்பில் உதவி மையம்

DIN

முழு பொதுமுடக்கத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிா்க்கும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் உதவி மையம் திறக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் பொதுமுடக்கத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கவும், அவா்களுக்கு உதவவும், சந்தேகங்களை தீா்க்கவும் சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

பொதுமுடக்கம் தொடா்பான சந்தேகம் இருந்தாலும், இ-பாஸ் தொடா்பாக விளக்கம் பெறவும் இம் மையத்தை பொதுமக்கள் 94981 - 81236, 94981 - 81239 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கரோனா சிகிச்சை மையம், ரெம்டெசிவிா் மருந்து வாங்குவதற்கான வழிகாட்டுதல்கள், அத்தியாவசியப் பொருள்களின் இயக்கம் உள்பட பல்வேறு தகவல்கள் தொடா்பான சந்தேகங்களை இந்த சேவை மையம் மூலம் தெரிந்து கொள்ளலாம். காவல் கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆணையா் தலைமையில் இந்த உதவி மையம் செயல்படும்.

உதவி தேவைப்படுவோா் தயக்கமின்றி இந்த சேவை மையத்தைத் தொடா்பு கொள்ளலாம். வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்கள், முதியோா்கள் எந்த உதவி தேவைப்பட்டாலும் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT