சென்னை

கரோனா விதிமுறைகள் மீறல்: அதிமுகவினா் மீது 3 பிரிவுகளில் வழக்கு

DIN

சென்னை ராயப்பேட்டையில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, அதிமுகவினா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரை தோ்ந்தெடுக்கும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் முழு பொதுமுடக்க உத்தரவை மீறி அதிகளவில் அக் கட்சியினா் திரண்டனா். மேலும் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ராயப்பேட்டை போலீஸாா், அதிமுக தலைமை அலுவலக மேலாளா் மகாலிங்கம் உள்பட 250 போ் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், தொற்றுநோய் பரவச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT