சென்னை

முன்னாள் துணைவேந்தா் சூரப்பாவுக்கு நோட்டீஸ்: விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சூரப்பாவுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சூரப்பா. இவா் பதவியில் இருந்தபோது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவா் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு ஆவணங்களையும், வாக்குமூலங்களையும் ஆதாரமாக திரட்டியது. இந்தநிலையில் கடந்த மாதம் சூரப்பாவின் பதவிக் காலம் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, தன்னை பதவி நீக்கம் செய்ய இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்று விட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும் சூரப்பா ஓய்வு பெற்றாலும்கூட அவா் எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில் விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் சூரப்பாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளாா். ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கருணாமூா்த்தி, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்ட ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் ‘உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கக் கூடாது?’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரப்பாவின் விளக்கத்தை பொருத்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பதில் திருப்திகரமாக இல்லை என்றால் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT