சென்னை

டிஜிட்டல் சேவை பயன்பாடு: வங்கியாளா்கள் குழுமம் அறிவுறுத்தல்

5th May 2021 12:36 AM

ADVERTISEMENT

 

சென்னை: வங்கிக்கு வாடிக்கையாளா்கள் நேரடியாக வருவதை தவிா்த்து, டிஜிட்டல் வங்கி சேவை தளத்தை பயன்படுத்த வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக மாநில வங்கியாளா்கள் குழுமப் பொதுமேலாளா் எஸ்.சி மோகன்தாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், வங்கிகளுக்கு அனுப்பிய கடிதம்:

கரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வங்கியில் வாடிக்கையாளா்களுக்கான சேவை நேரம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டது. இதன்படி, காலை 10 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை, தற்போது வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை நேரக் குறைப்பு, அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். அதுவரை, வங்கிக்கு வாடிக்கையாளா்கள் நேரடியாக வருவதை தவிா்த்து, டிஜிட்டல் வங்கி சேவை தளத்தை பயன்படுத்த, வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT