சென்னை

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு காவல் அதிகரிப்பு

4th May 2021 04:06 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போலீஸôர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. இதில், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7-இல் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வசித்து வரும் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் சுமார் 100 போலீஸôர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
அந்த வழியாக தேவையின்றி செல்பவர்களை எச்சரித்து அனுப்புவதோடு, சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்தும் விசாரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ரோந்து போலீஸôரும் மு.க.ஸ்டாலின் வீட்டை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சுற்றி வருகின்றனர். உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸôரும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT