சென்னை

ஆளுநருடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

24th Jun 2021 12:09 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகனுடன் அக் கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதன்கிழமை சந்தித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று, பேரவையில் பாஜகவின் பலம் 4-ஆக உள்ளது.

இந்த நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை எல்.முருகன் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நயினாா் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி ஆகியோா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். பாஜக பொதுச்செயலாளா் கே.டி.ராகவனும் உடன் சென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT