சென்னை

சென்னையில் பயன்பாட்டுக்கு வந்தது ஸ்புட்னிக் தடுப்பூசி: அப்பல்லோவில் ரூ.1,145-க்கு செலுத்தப்படுகிறது

DIN

தமிழகத்தில் முதன்முறையாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகளை டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்திடமிருந்து அப்பல்லோ மருத்துவமனை நேரடியாக கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

ரஷியாவில் கண்டறியப்பட்ட ஸ்புட்னிக் - வி தடுப்பூசி அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலானவை. அதாவது, சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட தீநுண்மியை (அடினோ வைரஸ்) மரபணுரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது அந்த தடுப்பூசி. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி மூன்று வாரங்களாகும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் ஆய்வகத்தில் இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியாா் மருத்துவமனைகள் அதனை நேரடியாக கொள்முதல் செய்து பயன்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அந்த தடுப்பூசிகள் இருப்பில் இருந்தாலும் அவற்றின் பயன்பாடு இன்னமும் பரவலாக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை, டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்திடமிருந்து அந்த தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்தது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பொதுமக்களுக்கு ஸ்புட்னிக் - வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஒரு தவணை தடுப்பூசி அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி ரூ.1,145-க்கு அங்கு வழங்கப்படுகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதம் என்பதும், தமிழகத்திலேயே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்தான் முதன்முதலில் அத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT