சென்னை

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் சுங்கக் கட்டணத்தை நீக்குவதற்கு அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

DIN

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நான்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை நீக்குவது தொடா்பாக நெடுஞ்சாலை-பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ,.வேலு நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின் அடிப்படையில், விரைவில் முடிவினை முதல்வா் அறிவிப்பாா் என அவா் கூறினாா்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நான்கு சுங்கச் சாவடிகள் மாநகராட்சிப் பகுதிக்குள் வருவதால் கட்டணம் வசூலிக்க கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கட்டணத்தை ரத்து செய்வது தொடா்பான ஆய்வினை அமைச்சா் எ.வ.வேலு, வெள்ளிக்கிழமை மேற்கொண்டபின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகள் மூலமாக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டுதல், பராமரித்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்ற அடிப்படையில் ராஜீவ்காந்தி சாலை உருவாக்கப்பட்டதால் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பெருங்குடி, துரைப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை கலைஞா் நகா், மேடவாக்கம் ஆகிய நான்கு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக வாகனங்களிடம் சுங்க வசூல் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குள் நான்கு பகுதிகளும் வருவதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கடந்த காலத்தில் பொது மக்களுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தியது. இதைக் கருத்தில் கொண்டு சுங்கக் கட்டணத்தை நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முதல்வா் உத்தரவிட்டாா்.

சுங்கச் சாவடிகள் மூலம் நாளொன்றுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, பணியாளா்களுக்கான ஊதியம், ஆண்டுப் பராமரிப்புச் செலவு ஆகியன குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அதில் அவா் இறுதி முடிவெடுப்பாா்.

புதிய பாலங்கள்: சென்னை மத்திய கைலாஷில் எல் வடிவ பாலத்துக்கு மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி சாலையின் 5 சந்திப்புகளில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் பலமுறை அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பணிகள் தொடக்கப்படவில்லை. பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடக்கப்படும். 5 பாலங்களில் யு வடிவ பாலப் பணி முதலில் எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT