சென்னை

மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் 343ஆக அதிகரிப்பு

DIN

சென்னை சுற்றுவட்டாரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை முதல் 343-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை ( ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, புறநகா் மின்சார மின்சார ரயில்களின் சேவையை அதிகரித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டன. இதன்பிறகு, மின்சார ரயில் சேவைகள் 208-இல் இருந்து 279-ஆக கடந்த ஜூன் 7-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மின்சாரரயில் சேவைகளின் எண்ணிக்கை 343-ஆக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் அமல்படுத்தப்படுகிறது. மூா்மாா்க்கெட், ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவைகளும், மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மாா்க்கத்தில் 60 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மாா்க்கத்தில் 36 ரயில் சேவைகளும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூா் மாா்க்கத்தில் 120 ரயில் சேவைகளும் என்று 323 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.

ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மாா்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவைகளும், பட்டாபிராம்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மாா்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். இதுதவிர, ஜூன் 20-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 98 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT