சென்னை

கொளத்தூரில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் தொடக்கி வைத்தார்

29th Jul 2021 05:17 AM

ADVERTISEMENT

 


சென்னை:  சென்னையில் தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். 
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டடம், திரு.வி.க.நகர் பிரதான சாலையில் 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் ஆகியவற்றை அவர் திறந்தார்.
டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி சார்பில் 360 மகளிருக்கு தையல் இயந்திரங்களை அளித்தார். 
மேலும், 223 மாணவர்கள் இலவச கணினி பயிற்சி பெறுவதற்கான உத்தரவுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு மகளிர் கல்லூரி:  பூம்புகார்
நகர் 1-ஆவது பிரதான சாலையில் அரசு மகளிர் கல்லூரி அமையும் இடம், வீனஸ் நகர் ஆண்கள் விடுதிக் கட்டடம், நீரேற்று நிலையம், துணை மின் நிலையம் ஆகியன அமைக்கப்பட உள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த நிகழ்வின் போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப் பேரவை உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT