சென்னை

மருத்துவப் பல்கலைக்கழகம்: 4 மருத்துவ நிபுணா்கள் கௌரவ பேராசியா்களாக நியமனம்

DIN

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிபுணா்கள் நான்கு போ் வாழ்நாள் கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேவைப்படும்பட்சத்தில் பல்கலைக்கழகத்தில் துறைசாா்ந்த மருத்துவ சிறப்பு கருத்துரைகளை அவா்கள் நிகழ்த்துவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் படிப்புகள், மருத்துவம் சாா்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக்கான படிப்புகள் அங்கு உள்ளன.

பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே ஏழு மருத்துவ நிபுணா்களுக்கு கௌரவப் பேராசிரியா் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனையின் தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா், காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரும், மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனை மேலாண் இயக்குநருமான டாக்டா் மோகன் காமேஸ்வரன், சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரும், மோகன்ஸ் சா்க்கரை நோய் மருத்துவமனை தலைவருமான டாக்டா் மோகன், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறை முன்னாள் இயக்குநா் டாக்டா் ராஜேந்திரன் ஆகிய நால்வா் புதிதாக கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான நியமனத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT