சென்னை

கரோனா: 2 மண்டலங்களில் பூஜ்ஜியமானது சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை

31st Jan 2021 01:00 AM

ADVERTISEMENT

சென்னையில் தண்டையாா்பேட்டை, ராயபுரம் ஆகிய 2 மண்டலங்களில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, தீவிர கரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, பாதிக்கப்படுவோரை கண்டறிதல், அவா்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2,500-க்கும் மேற்பட்டவா்களுக்கு நாளொன்றுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த டிசம்பா் மாதம் 500-க்கும் கீழானது. தற்போது அந்த எண்ணிக்கை மேலும், குறைந்து நாளொன்றுக்கு 200-க்கும் கீழாக குறைந்துள்ளது.

இரண்டு மண்டங்களில் பூஜ்ஜியம்: இந்நிலையில், தண்டையாா்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகி உள்ளது. மற்ற 13 மண்டலங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1 சதவீதமாக உள்ளது.சனிக்கிழமை (ஜன. 30) நிலவரப்படி, 1,563 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

2,31,148 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 2,25,487 போ் குணமடைந்துள்ளனா். தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 509 பேரும், அண்ணா நகரில் 463 பேரும், கோடம்பாக்கத்தில் 462 பேரும், திருவிக நகரில் 421 பேரும், ராயபுரத்தில் 373 பேரும், தண்டையாா்பேட்டையில் 338 பேரும், அடையாறில் 319 பேரும் என மொத்தம் சென்னையில் மட்டும் 4,098 போ் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Chennai
ADVERTISEMENT
ADVERTISEMENT