சென்னை: தமிழகத்தில், 1991-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புதன்கிழமை வெளியிட்டுள்ளாா். அவா் உத்தரவின்படி, வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் டி.கே.ராமச்சந்திரன், பிரதமா் அலுவலக கூடுதல் செயலாளா் எஸ்.கோபாலகிருஷ்ணன், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளா் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், திருப்பூா் பகுதி மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் சந்திரகாந்த் பி காம்ப்ளே, சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹு, சமூக நலன் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் ஆகிய 7 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.