சென்னை

வெகுமதி பெற தகுதியான தலைமை ஆசிரியா் விவரங்களை அனுப்ப உத்தரவு

30th Dec 2021 03:50 AM

ADVERTISEMENT

 

சென்னை: வெகுமதி பெற தகுதியான தலைமை ஆசிரியா் விவரங்களை அனுப்பப் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியின மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சோ்த்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு முடிய தொடா்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமை ஆசிரியா்களுக்கு இரண்டு பிரிவில் வெகுமதி தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இத்திட்டத்தை 2021-22-ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்தும் பொருட்டு, தற்போது புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியாக வெகுமதி தொகை பெற தகுதியுள்ள தலைமை ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு மின்னஞ்சல் மூலமாகவும்,  முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலையும் அனுப்பி வைக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT