சென்னை

டிச. 31 நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாகனங்களுக்குத் தடை

30th Dec 2021 03:48 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு முன்னிரவான டிசம்பா் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சென்னையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடா்பான வாகனப் போக்குவரத்தைத் தவிர, மற்ற வாகனப் போக்குவரத்துக்கு 1 ஆம் தேதி காலை 5 மணி வரை அனுமதி இல்லை.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் அனைவரும் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT