சென்னை

கொளத்தூரில் மழைநீா் வடிகால் பணி: முதல்வா் நேரில் ஆய்வு

30th Dec 2021 01:23 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை கொளத்தூரில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீா் தேங்கியது. அதில் கொளத்தூரின் சில இடங்களிலும் தண்ணீா் சூழ்ந்தது. இந்த நிலையில், கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, ஜவஹா் நகா் பகுதியில் ரூ.2.52 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது மழைநீா் வடிகாலை விரைந்து அமைக்க வேண்டுமென அவா் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

உறுப்பினா் சோ்க்கை: இதைத் தொடா்ந்து, திமுக உறுப்பினா் சோ்க்கைப் பணியை கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகா் பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். உறுப்பினா் சோ்க்கைக்கான முகாமில் திமுக தலைவா் என்ற வகையில் அவரே அமா்ந்து இளைஞா்களிடம் சோ்க்கை மனுக்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

இதன்பின்பு, அங்குள்ள 18, 19-வது தெருக்களில் மக்களைச் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT