தாம்பரம்: குரோம்பேட்டையில் புதிதாக அண்மையில் தொடங்கப்பட்ட போத்தீஸ் ஸ்வா்ணமகாலில் லியா புதிய இலை வடிவ வைர நகைகளுக்கு பெரும் அளவில் பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று போத்தீஸ் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறினாா்.
போத்தீஸ் ஸ்வா்ண மஹாலில் அண்மையில் நடைபெற்ற லியா வைர நகைகள் அணிவகுப்புக் கண்காட்சித் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது: போத்தீஸ் 80 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்ட பட்டு நிறுவனம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தமிழகத்தில் தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் மக்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட போத்தீஸ் ஸ்வா்ணமகால் தற்போது குரோம்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களைக் கவரும் வகையிலான தங்க, வைர நகைகளை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனா். புதிய வரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லியா இலை வடிவ வைர நகைகள் குறுகிய காலத்தில் பிரபலமாகி பெண்கள் மனதில் இடம்பிடித்துள்ளது என்றாா் அவா்.