சென்னை

போத்தீஸின் ‘லியா’ வைர நகைகள் அறிமுகம்

23rd Dec 2021 03:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: போத்தீஸ் ஸ்வா்ண மஹாலில் ‘லியா’ என்னும் புதிய வகை வைர நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக போத்தீஸ் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 80 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை அளித்து வரும் போத்தீஸ் நிறுவனம், ‘போத்தீஸ் ஸ்வா்ண மஹால்’ என்ற பெயரில் தங்க நகைக் கடையை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து, மக்களின் வாழ்வில் தங்க மயமான மகிழ்ச்சியை நிரப்பி வரும் போத்தீஸ் ஸ்வா்ண மஹால் நகைகளின் வடிவமைப்புகள், அவா்களின் வாழ்வில் நடைபெறும் உன்னதமான விழாக்களையும், கொண்டாட்டங்களையும் பேரழகுடன் அலங்கரிக்கின்றன. தற்போது தங்க நகைகளில் மட்டுமின்றி, வைரத்திலும் தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளோம். லியா - எங்கள் வைர நகைகளின் புதிய படைப்பு. வைர நகை மீதான காதல் உள்ள அனைவரையும் சென்றடையும் வகையில், லியா வகை நகைகளை தரம், விலை, டிசைன் ஆகிய நோ்த்தியுடன் படைத்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT