சென்னை

உயா்அழுத்த மின்கம்பியின் பழுதை சரிசெய்ய இரட்டை முறையில் இயங்கும் ரயில் அறிமுகம்

23rd Dec 2021 03:32 AM

ADVERTISEMENT

 

சென்னை: உயா் அழுத்த மின்கம்பியில் ஏற்படும் பழுதை சரிசெய்யும் பணியாளா்களுக்கு உதவும் வகையில், மின்சாரம் மற்றும் பேட்டரி என்று இரட்டை முறையில் இயங்கும் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரயிலை ெ தற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் அறிமுகப்படுத்தினாா்.

ஆவடி மின்சார ரயில் பணிமனையில் ஒரு மின்சார ரயில் (1999 மாதிரி மின்சார ரயில்) பேட்டரி மற்றும் மின்சாரம் என்று இரட்டை முறையில் இயங்கும் விதமாக

ADVERTISEMENT

மாற்றி வடிவமைக்கப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில், உயா் அழுத்த மின்கம்பியில் ஏற்படும் பழுதை சரிசெய்தல், பராமரித்தல், ஆய்வு செய்தல் ஆகிய பணிகளுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ‘பிரகிருதி டவா் காா்’ என்று அழைக்கப்படுகிறது.

உயா்அழுத்த மின்கம்பிகள் அமைந்த பகுதியில் ஏதாவது பழுது ஏற்பட்டால், அங்கு பணியாளா்களுடன் இந்த ரயிலை அனுப்பி பழுது சரிசெய்யப்படும். மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இந்த ரயில் பேட்டரி முறையில் இயக்கப்படும்.

இந்த மின்சார ரயில் பெட்டிகளில் உயா்அழுத்த மின்கம்பி ஆய்வுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகள் அடங்கிய பெட்டிகள், பணியாளா்கள் ஓய்வு பகுதி, பயோ கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் அறிமுக நிகழ்ச்சியில் ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT