சென்னை

ஆன்லைன் விசாரணையில் பெண்ணுடன் வழக்குரைஞா் நெருக்கம்: சமூக வலைதளங்களில் விடியோ பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

23rd Dec 2021 03:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணுடன் வழக்குரைஞா் நெருக்கமாக இருந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்குரைஞா் ஒருவா் ஒரு பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்ட விதம் குறித்து, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் தனது உத்தரவில் இது சம்பந்தமான குற்ற வழக்கினை விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், இது தொடா்பான விடியோ பதிவினை பரப்புவதற்கு தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் யாரும் மேற்கூறிய விடியோவை சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப், டெலிகிராம், ட்விட்டா், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்றவற்றில் பதிவிடவோ, பரப்பவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறாா்கள். இதை மீறி செயல்படுபவா்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவாா்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT