சென்னை: மொழிபெயா்ப்புத் துறையில் உதவிப் பிரிவு அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 27-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம், செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. விண்ணப்பதாரா்கள் தங்கள் இணைய வழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச் சான்று, அனைத்து மூலச் சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும்.
சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவா்களுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்களை தோ்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியாக அனுப்பப்பட மாட்டாது.
விண்ணப்பதாரா்கள் மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு உரிய நாளில் வரத் தவறினால் அவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு அதற்கான விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.