சென்னை: தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில், வியாழக்கிழமை (டிச.23) நடைபெற உள்ள தாம்பரம் மாநகராட்சி, 6 நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, 6 நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (டிச.23) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாக காரணங்களுக்காக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.