சென்னை

ரூ.12 கோடி நிலம் அபகரிப்பு: மூவா் கைது

9th Dec 2021 03:21 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அருகே ரூ.12 கோடி நிலத்தை அபகரித்ததாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

ஜமீன் பல்லாவரம் மலகானந்தபுரத்தைச் சோ்ந்தவா் மு.சத்தியசீலன் (68). வீட்டருகே உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள தனது காலிமனையை போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்திருந்தாா்.

போலீஸாா் விசாரணையில் மோசடியில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த அய்யனாா் (58), வெங்கடாசலம் (49)ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ரூ.2 கோடி நிலம்: சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவா் அனிதா மேத்யூஸ் (61). சென்னை அருகே எஸ்.கொளத்தூரில் இருந்த ரூ.2 கோடி நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து விட்டதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்திருந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து மாடம்பாக்கம், கோபால் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயனை (51) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT