சென்னை

திரைப்பட இயக்குநா் எம்.தியாகராஜன் காலமானாா்

9th Dec 2021 12:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: திரைப்பட இயக்குநா் எம்.தியாகராஜன், சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் எம்.தியாகராஜன். டி.எப்.டி. முடித்து திரைத்துறைக்கு வந்தாா். பிரபு நடித்த ‘வெற்றி மேல் வெற்றி’, ஏ.வி.எம்-மின் 150-ஆவது படமும் விஜயகாந்த் நடித்து பிரபலமான ‘மாநகர காவல்’ உள்ளிட்ட  திரைப்படங்களை இயக்கியவா்.

வடபழனி சாலையில் இறந்த நிலையில், அவரது உடல் போலீஸாரால் மீட்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரைத்துறையினா் இரங்கல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT