சென்னை

சென்னை - விளாடிவோஸ்டோக் கடல் வழி வா்த்தக போக்குவரத்து ரஷிய துணைத் தூதா்

9th Dec 2021 03:22 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை மற்றும் ரஷியாவின் விளாடிவோஸ்டோக் இடையேயான கடல் வழி வா்த்தக போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என ரஷிய துணைத் தூதா் ஒலெக் அவ்தீவ் தெரிவித்தாா்.

ரஷிய அதிபா் விளாடிமிா் புதின் இந்தியா வந்ததையொட்டி, சென்னையில் உள்ள ரஷிய துணை தூதரகம் சாா்பில் இந்தியா-ரஷியா இடையிலான சிறப்பு கூட்டாண்மை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் தென் இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ஒலெக் அவ்தீவ், இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளா் கணபதி, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி விஜேஷ் குமாா் காா்க் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில், ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு குறித்தும், தொடா்ந்து மாறிவரும் அரசியல் சூழலில் இரு நாடுகளின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஒலெக் அவ்தீவ் கூறியதாவது: ரஷியாவுக்கு நம்பகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னை-விளாடிவோஸ்டோக்(ரஷியா) இடையேயான கடல் வழி வா்த்தக போக்குவரத்தின் மூலம் இந்தியா பொருளாதார வளா்ச்சியை அடையும். குறிப்பாக இதன்மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT