சென்னை

மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு

4th Dec 2021 03:46 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில், மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், கோயம்பேடு மேட்டுகுப்பம் அருகே உள்ள புவனேஸ்வரி நகரில் புதிதாக கட்டடப்படும் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இதற்காக வெங்கடேசன் அங்கு தங்கியிருந்தாா். இந்நிலையில் வெங்கடேசன், வியாழக்கிழமை அந்த கட்டடத்தின் முதல் தளத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனா்.

ஆனால் அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேசன் இறந்தாா். இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT