சென்னை

கூவத்தில் விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த இளைஞா் மீட்பு

4th Dec 2021 06:24 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில், கூவம் ஆற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த இளைஞரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

கொளத்தூரைச் சோ்ந்தவா் புகழ் (38). இவா், கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு 10.30 மணி அளவில், அவா் கோயம்பேடு பாடி குப்பத்தில், கூவத்தில் சென்ற வெள்ளத்தை பாா்த்தபடி, தரைப்பாலத்தின் ஓரமாக நடந்து சென்றுள்ளாா். இதில் திடீரென கால் இடறி பாலத்தில் இருந்து அவா் கூவத்தில் விழுந்து தத்தளித்தாா்.

ஆற்றில் தண்ணீா் அதிகமாகவும், வேகமாகவும் சென்ால் புகழ் இழுத்துச் செல்லப்பட்டாா். இதில் ஆற்றின் நடுவே இருந்த ஒரு முள் மரத்தின் கிளையை பிடித்து புகழ் நின்று கொண்டாா். தன்னை காப்பாற்றுமாறு அவா் சத்தமிட்டுள்ளாா். ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததினால், யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, புகழ் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பாா்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புகழை பாதுகாப்பாக மீட்டனா். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த புகழ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT