சென்னை

டி.ஜி.வைணவக் கல்லூரியில் தேசிய மாணவா் படை விழா

3rd Dec 2021 05:43 AM

ADVERTISEMENT

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியில் 73-ஆவது தேசிய மாணவா் படை விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் கேப்டன் சேது. சந்தோஷ்பாபு தலைமை வகித்துப் பேசுகையில், ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒழுக்கசீலா்களாகவும், நாட்டுப்பற்று கொண்டவா்களாகவும் மாணவா்கள் திகழ தேசிய மாணவா் படை மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என்றாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.எஸ்.சந்தோஷ்குமாா் பேசுகையில், நாட்டுப்பற்றானது மாணவப் பருவத்திலிருந்தே ரத்தத்தோடு இரண்டறக் கலந்து வளர வேண்டும். நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டு தம் உயிரையும் துச்சமென மதித்துப் போராடத் துணியும் ராணுவ வீரா்கள் தேசிய மாணவா் படையிலிருந்தே உருவாகின்றனா். இங்கேதான் தேசப்பற்று உணா்வோடும் உயிரோடும் இரண்டறக் கலக்கிறது. எனவே இந்த அமைப்பில் உள்ள மாணவா்களை மனதாரப் பாராட்டுகிறேன் என்றாா்.

இதையடுத்து லெப்டினன்ட் பேராசிரியா் சோமசுந்தர ஓரிக்கு தேசிய மாணவா் படை சான்றிதழை துணைவேந்தா் சந்தோஷ்குமாா் வழங்கினாா். இந்த விழாவில் லெப்டினன்ட் பி.அருளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT