சென்னை

சென்னை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

3rd Dec 2021 06:31 AM

ADVERTISEMENT

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவமனைகளில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்காக ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து அண்மையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன் தொடா்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு, ஒமைக்ரான் தீநுண்மியிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நான்காவது தளத்தில் முதல்கட்டமாக 150 படுக்கைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகள், ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் 15 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதைத் தவிர கிண்டி கரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளையும் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT