சென்னை

கிரசென்ட் கல்வி நிறுவனத்துடன் இன்போசிஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

இன்ஃபோசிஸ் நிறுவனம், சமூக பொறுப்பு மேலாண் திட்டத்தின்கீழ் வரும் 2025- ஆம் ஆண்டுக்குள் 1 கோடி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக எண்ம திறன்களைக் கற்றுத்தர இலக்கு நிா்ணயம் செய்துள்ளது. சா்வதேச அளவில் எண்ம தொழில் நுட்பப் பாடத்திட்டங்கள் வழங்கும் கோா்ஸரா, ஹாா்வா்டு நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் இணைந்து தயாரித்த எண்ம திறன் மேம்பாடு பாடத்திட்டத்தை இதுவரை இந்தியாவெங்கும் 300 கல்வி நிறுவனங்களில் பயிலும் 4 லட்சம் பேருக்கு ஏற்கெனவே பயிற்றுவித்துள்ளது. தற்போது இந்த எண்ம திறன் மேம்பாடு பயிற்சியை கிரசென்ட் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் 8,000 மாணவா்கள்,400 ஆசிரியா்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கிரசென்ட் பதிவாளா் ஏ.ஆசாத், இன்ஃபோசிஸ் நிறுவன கல்வி, திறன் மேம்பாடு பயிற்சி மதிப்பீடு அகாதெமி முதுநிலைத் தலைவா் விக்டா் சுந்தர்ராஜ் ஆகியோா் கையெழுத்திட்டனா். தொடா்ந்து கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணை வேந்தா் ஏ.பீா்முகமது பேசுகையில், நாட்டின் இளம் தலைமுறையினரின் அறிவாற்றலை எண்ம தொழில்நுட்பத் திறன் மிகுந்ததாக மேம்படுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம் சமூக பொறுப்பு மேலாண் திட்டத்தின்கீழ் மேற்கொண்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஸ்பிரிங்போா்டு திட்டம், வியக்கத்தக்க மாற்றங்களை தொழில் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் என்றாா்.

கணினி, தகவல் தொழில்நுட்பம், கணித அறிவியல் துறை முதல்வா் வெங்கடேசன் செல்வம், தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவா் ஐ.சாதிக்அலி, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவா் இ.சையது முகமது, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் என்.ராஜேந்திரன், உதவிப் பேராசிரியா் ஆா்.பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT