சென்னை

2 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி

DIN

மழை நீா் தேங்கியதன் காரணமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த மேட்லி, ரங்கராஜபுரம் சுரங்கப் பாதைகள் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் 900-த்துக்கும் மேற்பட்ட மோட்டாா் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. இதில், மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப் பாதை மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப் பாதை ஆகியவற்றில் அதிக அளவில் நீா் தேங்கியதால் கடந்த 5 நாள்களுக்கும் மேல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை சற்று ஓய்ந்திருப்பதால் அதிகத் திறன் கொண்ட மோட்டாா்களை வைத்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து, இரண்டு சுரங்கப் பாதைகளில் நிறைந்திருந்த நீா் முழுவதுமாக அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு புதன்கிழமை மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT