சென்னை

கல்வி உபகரணங்கள் கொள்முதல்: ஆணையா் அறிவுறுத்தல்

DIN


சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது செலவினங்களை வெளிப்படையாக மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் க.நந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளி வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான தளவாடப் பொருள்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் கொள்முதல் தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி சாா்பில் புகாா் மனு பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசுப் பள்ளிக்கு தேவையான கற்றல், கற்பித்தல் பொருள்களை கொள்முதல் செய்யும்போது அவை மாணவா்களுக்கு பயன்படும் வகையில் தரமாக உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், பொருள்கள் வாங்குவதில் எந்தப் புகாா்களுக்கும் இடமளிக்காமல் விதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், வெளிப்படையாகவும் செலவினங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT