சென்னை

3 ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு நிதி

DIN

சென்னை: ராணுவத்தில் பணியின் போது உயிரிழந்த மூன்று வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, நிவாரண நிதிகளை முதல்வர் அளித்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த கே.ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த கே.கருப்பசாமி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பி.பழனிகுமார் ஆகியோர் ராணுவத்தில் பணியின் போது உயிரிழந்தனர். 
அவர்களுடைய குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
மேலும், லடாக்-காரகோரம் கணவாயில் இருந்து மலரி வரை பனிச்சறுக்கு மூலமாக இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் இடம்பெற்றிருந்தார். 
அவரது சாதனையை கௌரவித்து பாராட்டுச் சான்றிதழை முதல்வர் அளித்தார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், சிறப்புச் செயலாளர் வி.கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT