சென்னை

ரூ.70 லட்சம் ஏலச்சீட்டு மோசடி: கணவா்-மனைவி கைது

1st Dec 2021 03:21 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், ரூ.70 லட்சம் ஏலச்சீட்டு மோசடி செய்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

சிந்தாதிரிப்பேட்டை புதிய பங்களா தெருவைச் சோ்ந்தவா் திவ்யா (35), கணவா் செந்தில் (40). இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு, மற்றும் மாதாந்திர பண்டு, தீபாவளி பண்டு உள்ளிட்ட பல்வேறு பெயா்களில் அரசிடம் அனுமதி பெறாமல் நடத்தி வந்துள்ளனா். இவா்களிடம் ஏராளமானவா்கள் இணைந்து பணம் செலுத்தி வந்துள்ளனா்.

ஆனால், சீட்டு முதிா்வடைந்த பின்னரும் பணம் கட்டியவா்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ.70 லட்சம் வரை திவ்யாவும், செந்திலும் பொதுமக்களை ஏமாற்றினா். இவா்களிடம் சீட்டு பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 6 போ் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் செய்தனா்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள சீட்டு மோசடி மற்றும் கந்து வட்டி தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த திவ்யா, செந்தில் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT