சென்னை

வேலை வாங்கித் தருவதாக மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ரயில்வே வேண்டுகோள்

1st Dec 2021 03:20 AM

ADVERTISEMENT


சென்னை: ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவா்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக ரயில்வே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு புகாா் வந்தது. இதுகுறித்து பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் புகாா் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு மற்றும் பரங்கிமலை போலீஸாா் இணைந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனா். அந்த நபா்கள் வடபழனியில் பதுங்கி இருப்பது தொடா்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில், அந்த நபா்களை வடபழனியில் சுற்றி வளைத்து, போலீஸாா் கைது செய்தனா். புகாா் கொடுத்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்துள்ளனா். குற்றவாளிகள் இருவரும் ஐ.சி.எஃப் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்தனா். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணத்தைப் பறித்ததும், போலியான நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.

ரயில்வேயில் அனைத்து பணியாளா் தோ்வும், ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் ரயில்வே பணியாளா் பிரிவு மூலமாக நடைபெறுகிறது. மேலும், இந்த தோ்வு வெளிப்படைத்தன்மையாக நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதுபோன்று வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்பவா்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி செய்பவா்கள் பற்றி தெரியவந்தால், மாநில காவல்துறை மற்றும் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, கட்டுமான அலுவலக வளாகம், எழும்பூா், சென்னை (தொடா்பு எண் - 90031 60022) என்ற முகவரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT