சென்னை

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

1st Dec 2021 03:20 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை கோயம்பேட்டில் தனியாா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை கோயம்பேட்டில் ஒரு தனியாா் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரி மாணவா்கள், செவ்வாய்க்கிழமை திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள், அந்தக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு ஆங்கில ஆசிரியா் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் தவறாக நடந்ததாகவும், அவா் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் கல்லூரி நிா்வாகிகளும், காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதாக இரு தரப்பும் உறுதி அளித்த பின்னா், மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இப்போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT