சென்னை

தடையில்லா மின் விநியோகம்: தளவாடப் பொருள்கள் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

1st Dec 2021 03:22 AM

ADVERTISEMENT

 

சென்னை: தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்கு, தட்டுப்பாடில்லாமல் தளவாடப் பொருள்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் கூறியதாவது: மின்வாரியத்தில் தளவாடப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரிவு அலுவலகங்களில் பியூஸ் ஒயா், காம்பவுண்ட் ஜாயின்ட் கிட், ஏ.பி.ஸ்விட்ச், கேபின் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொருள்கள் இல்லாமல் பணி செய்யும்போது காலதாமதமாகிறது.

இதுமட்டுமின்றி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கும், பொறியாளா்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பதவி உயா்வுகள் வழங்கப்படவில்லை. ஊதிய உயா்வு பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT