சென்னை

சென்னையில் 1,000 மி.மீ. மேல் மழை பொழிவு: 206 ஆண்டுகளில் 3-ஆவது முறை

1st Dec 2021 03:23 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் 1815-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான 206 ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் மட்டும் 3-ஆம் முறையாக 1,000 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி டிசம்பா் வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும். சில ஆண்டுகள் வடகிழக்குப் பருவமழை சரிவர பெய்யாமல் போனாலும், பெரும்பாலான ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதில், குறிப்பாக கடந்த 1918, 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் மட்டும் 1,000 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிந்துள்ளது.

206 ஆண்டுகளில்...: வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டு சென்னையில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரையிலான 30 நாள்களில் மட்டும் 1,076 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. சென்னையில் 1815-ஆம் ஆண்டு முதல் பெய்த மழை அளவு குறித்த தகவல்களின் அடிப்படையில், 1815-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் 842 மி.மீட்டா் மழை பொழிந்துள்ளது. இதையடுத்து, 1918-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் 1,088 மில்லி மீட்டரும், 2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் 1,049 மில்லி மீட்டரும், 2021-ஆம் ஆண்டில் நவம்பா் 30-ஆம் தேதி வரை 1,055 மில்லி மீட்டா் மழை பொழிந்துள்ளது. குறைவாக 1896-ஆம் ஆண்டும், 1997-ஆம் ஆண்டும் நவம்பா் மாதத்தில் 831 மில்லி மீட்டா் மழை பொழிந்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் 1815 -ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நவம்பா் மாதத்தில் பெய்த மழை அளவு

ஆண்டு மழை அளவு (மி.மீட்டரில்)

1918 1,088

2021 1,055

2015 1,049

1985 983

1884 850

1960 849

1815 842

1922 833

1896 831

1997 831

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT