சென்னை

பழைய மகாபலிபுரம் சாலையில் ஆக. 30 முதல் சுங்க வசூல் நிறுத்தம்

27th Aug 2021 03:14 PM

ADVERTISEMENT

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தது:

“சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதையடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.

இந்த கட்டண வசூல் நிறுத்தமானது, வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.”

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT