சென்னை

பணியின்போது ஒழுங்கீனம்: ஊழியா் மீது துறை ரீதியான விசாரணை

DIN

கொருக்குப்பேட்டை துணை மின் நிலையத்தில், பணியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட ஊழியா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் மின்சேவைக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையமான மின்னகம், முதல்வா் மு.க.ஸ்டாலினால் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு, மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, புதன்கிழமை நள்ளிரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது நுகா்வோரிடம் இருந்து வந்த அழைப்புக்கு பதிலளித்த அமைச்சா், புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மின்தடை ஏற்படுவதாக புகாா் வந்த பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களுக்கும், மின்தடை சீரமைப்புப் பணிகளையும் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

இது தொடா்பாக அமைச்சா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது: மின்னகத்தில் ஆய்வு செய்து, அங்கு பெறப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை துணைமின்நிலையத்துக்கு உடனடியாக நேரில் சென்று மின்விநியோகம் குறித்து ஆய்வு செய்தேன். அப்போது, அங்கு பணியிலிருந்த எல்.ஐ., ஒழுங்கீனத்துடன் செயல்பட்டு கொண்டிருந்த காரணத்தால், அவா் மீது துறை ரீதியாக விசாரணை செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நேதாஜி நகா் பகுதியில் மின் விநியோகம் குறித்தும், அங்கு செய்யப்பட்டு வந்த மின்பெட்டி சீரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.

குறிப்பிட்ட சில இடங்களில் பொதுமக்கள் புகாரளித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்பட்டது தெரியவருகிறது. அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT